உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 1 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை.  ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர் தனக்கு ‘ஊக்கம் தரும் வேலைகள்’ பற்றி அறியாமல் இருப்பது; (Joyous Quadrant என்ற இந்தக் கருத்தைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்). தன் நிறுவனத்திற்கு வடிவம்  கொடுக்காமல் இருப்பது; அதனால் கனவுகளை செயல்களாக...

Read More →

SPC – Statistical Process Control – புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாடு

நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு முறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் செய்பவர்கள் என்ற பாகுபாடும் பிரபலமாகி உலகெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் SPC என்றழைக்கப்படும் புள்ளியியல் சார்ந்த தரக்கட்டுப்பாட்டு முறையின் தோற்றத்தையும், SPC யின் அடிப்படையையும் பற்றி விவாதிப்போம். உற்பத்தித் திறன் பெருக்கம் ஃபோர்டின் வேலைப் பிரிவுக் கோட்பாடுகளின் அடுத்த கட்டமாக, பணித் துறைகள் (departments / divisions) நடைமுறைக்கு வந்தன. நாட்கள்செல்லச் செல்ல, ஒவ்வொரு துறையும் அதற்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தன. திறமையான பணியாளர்கள் ஃபோர்மேன் / சூப்பர்வைசர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் தயாரிப்புகளை ஆய்வு செய்யும் பணி திறமையான மற்றும்...

Read More →

When all your trials fail…

Advanced Problem Solving Methodologies - Design of Experiments - DoE It was a hot summer and I was travelling through the deserts of Western India. A wonderful piece of land with varying lifestyles every few hours of drive. I eagerly looked at the domesticated camels and started thinking about how things happened so quickly and how did I manage to plan my trip to that well-known cement factory for a DoE engagement. A week before – I received a call...

Read More →

ஃபோர்டு உற்பத்தி முறை

முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற  விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு.  ஃபோர்டு மோட்டார் நிறுவனம் போர்டு மோட்டார் நிறுவனம் (புகைப்பட உதவி - விக்கிபீடியா) தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சொந்தமான ஒரு கம்பெனியில் பொறியாளராக வேலை செய்துகொண்டிருந்த போதிலும் பெட்ரோலில் ஓடக்கூடிய வாகனங்களைத் தானே உருவாக்க வேண்டும்...

Read More →

தற்போதைய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?

பொருளாதார மந்த நிலை - உண்மையா மாயையா? ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் தூண்டுதல்கள் எவ்வாறு, எவ்வளவு விரைவில் இந்நிலையை மாற்றப் போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு SME உரிமையாளராக, மந்தநிலையை...

Read More →

5S விளையாட்டு

நம்மில் பெரும்பாலோர் 5S முறையை வெறும் Housekeeping உத்தியாகவே கருதுகிறோம். உண்மையில் housekeeping 5S இன் ஒரு பகுதி மட்டுமே. 5S இன் முழுப் பலன் மிகப் பெரியது. 5S என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் தொடக்கப் புள்ளியாகவும், மக்கள் ஈடுபாட்டிற்கான எளிமையான வழிமுறையாகவும் பயன்படுகிறது. பல 5S பயிற்சி வகுப்புகள் மற்றும் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியாக, 5S விளையாட்டை பகிர விரும்புகிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா? இந்த விளையாட்டு 5S முறையின் செயலாக்கம் மற்றும் பயன்களைச் சித்தரிக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுவது மிக சுலபம். அலுவலகத்திலோ பயிற்சி வகுப்பறைகளிலோ 5S Game Sheets மற்றும் இரண்டு வெவ்வேறு வண்ண பேனாக்கள் பயன்படுத்தி இதனை ஒரு மேசை மீதே எளிமையாக விளையாட முடியும்....

Read More →

5S Game – Productivity thru 5S

5S is often thought of as a housekeeping technique. Of course, we rearrange materials and machines as part of 5S. However, this is not the whole context. 5S can be seen as the start point of productivity improvement initiatives and the simplest platform for people engagement. In continuation of the article on 5S and several 5S workshops, I wanted to share the 5S game. The 5S Game This game depicts the use and effectiveness of the 5S methodology. This is...

Read More →

நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு (Time & Motion Study)

அறிவியல் சார்ந்த மேலாண்மை முறை 1908 ஆம் ஆண்டு தியோடர் ரூஸ்வெல்டின் உரையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உற்பத்தித் திறனுக்கான தேடல் அதிகரிக்கத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் பிரெட்ரிக் வின்ஸ்லோ டய்லர் (Frederick Winslow Taylor) என்ற பொறியாளரின் Principles of Scientific Management என்ற நூல் அமெரிக்க உற்பத்தி முறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. இதன்  விளைவாக, உற்பத்தித் திறன் பற்றிய விழிப்புணர்வு பரவியது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் - அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய நேரக்கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்து அதன் மூலம் தினசரி உற்பத்தியைப் பலமடங்கு அதிகரித்தன. தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிற்கான இலக்குகளை முன்கூட்டியே அந்நிறுவனங்கள் நிர்ணயித்தன. மேலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும்...

Read More →

ஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts

CSense - Interchangeable Parts

1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது. கிரிபேவெல் உற்பத்தி முறை - நெப்போலியனின் ரகசிய ஆயுதம் பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில்...

Read More →

உற்பத்தித் துறையின் வளர்ச்சி

'Manufacturing (உற்பத்தி)' என்றால் என்ன? 'Manufacturing' என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். 'Manu' என்றால் 'செய்தல்' 'facture' என்றால் 'கைகளால்'. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு 'கைகளால் செய்தல்' என்றே கொள்ளவேண்டும். ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்தப் புரட்சி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது. ஜவுளித் தயாரிப்பு, சுரங்கம், இரும்பு உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் அனைத்தும் முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன....

Read More →