உற்பத்தித் துறையின் வளர்ச்சி
'Manufacturing (உற்பத்தி)' என்றால் என்ன? 'Manufacturing' என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். 'Manu' என்றால் 'செய்தல்' 'facture' என்றால் 'கைகளால்'. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு 'கைகளால் செய்தல்' என்றே கொள்ளவேண்டும். ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்தப் புரட்சி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது. ஜவுளித் தயாரிப்பு, சுரங்கம், இரும்பு உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் அனைத்தும் முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன....