விற்பனைக்குத் தயாராக இருத்தல் – பகுதி 1 – Inventory Turns

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 18 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு salesHOD-இன் KRA, உள் விற்பனையில் வாடிக்கையாளர் சார்ந்த செயல்முறைகளையும் (customer related processes) அவற்றின் அளவீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வரும் அத்தியாயங்களில் உள்விற்பனையில், விற்பனைத் துறையின் கடை சார்ந்த வேலைகள் பற்றி பார்ப்போம். இந்த அத்தியாயத்தில் எப்படி விற்பனைக்குத் தயாராவது என்பதில் - கடையின் கொள்ளளவு, சதுர அடிக்கான லாபம் மற்றும் சரக்கு சுழற்சி பற்றி விவாதிப்போம். தயார் நிலை 'அதிர்ஷ்டம் தயாராக இருப்பவர்களுக்கே துணை செய்யும்' என்று சொல்வதுண்டு. அதேபோல, தயாராக இருக்கும்போதுதான் ஒரு...

Read More →

Roles of Over the Counter Sales in SMEs

CSense - Sales Generations

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 17 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs உள் மற்றும் வெளி விற்பனை விற்பனைத் துறையை விற்பனை நடக்கும் முறையை வைத்து உள் விற்பனை (Over the Counter Sales) மற்றும் வெளி விற்பனை (Traveling Sales) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உள் விற்பனை என்பது வாடிக்கையாளர் நமது நிறுவனத்தை அல்லது கடையை அல்லது நமது இணைய தளத்தைத் தேடிவந்து வாங்கிச்செல்வது. வெளிவிற்பனை என்பது நமது விற்பனைப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர் இருக்கும் இடங்களுக்குச் சென்று விற்பனை செய்வது. முதலில் நாம் உள் விற்பனையைப் பற்றி பார்ப்போம். உள் விற்பனை Sales HODஇன் KRAக்கள் மிக...

Read More →

Utilising Sales Ratios and Sales Funnel

CSense- 7 sales steps and 8 sales ratios

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 16 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை கடந்த அத்தியாயங்களில் ஒரு SME நிறுவனத்திற்கு Organisation Structure ஏன் அவசியம் என்பதையும், எத்தனைத் துறைகள், என்னென்ன துறைகள் இருக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம். தொடர்ந்து துறைகள் எந்தக் காலத்தைக் குறிக்கின்றன (மார்க்கெட்டிங், Process & Product Development, People Development - Future / Sales, Operations, Admin & Welfare - Present / Accounts, MIS - Past) ஒரு நிறுவனர் எந்தக் காலத்தில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதையும் பார்த்தோம். இதற்கு முந்தைய சில அத்தியாயங்களில் மார்க்கெட்டிங் துறை, மேம்பாட்டுத்...

Read More →

விற்பனைத் துறையின் நோக்கம்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 15 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs விற்பனைத் துறையின் முக்கியத்துவம் ஒரு SME நிறுவனத்தில் பொருள் ஈட்டும் இரண்டு துறைகள் - உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையாகும்.  ஒரு நிறுவனத்தின் விற்பனைத் துறையே அதன் பலம். மிகப்பெரிய நிறுவனங்களான ITC, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற FMCG நிறுவனங்களின் பின்புலம் அவர்களது பணபலம் அல்லது அவர்கள் டிவியில் கொடுக்கும் விளம்பரங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக - அவர்களின் ஆணிவேர் போல் நின்று அவர்களை வளர்ப்பது அவர்களது விற்பனைத் துறையாகும். அவர்களின் விற்பனை வலையின் பலம் என்னவென்றால் அவர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திய ஒரு...

Read More →

மேம்பாட்டுத் துறையின் வேலைகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 13 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான ரகசியம் மற்றும் Cost Curve பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதில் ஒரு SME இல் மேம்பாட்டுத் துறையின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், மேம்பாட்டுத் துறையின் முக்கியப் பணிகளைப் பற்றிப் பார்ப்போம். 1. வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் குறைகள் (Complaints) நாம் முன்பு பார்த்தது போல, மேம்பாட்டுத் துறையின் பணிகள் வாடிக்கையாளரிடமிருந்தே ஆரம்பிக்கின்றன. இத்துறையின் அடிப்படை நோக்கமே வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு உற்பத்திப் பொருட்களையும் சேவையையும் மேம்படுத்துதல். அதன் முதல் படி வாடிக்கையாளரின் குறைகளையும்...

Read More →

Product & Process Development in SMEs

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 12 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs Product & Process Development - பொருள் மற்றும் செயல்முறை மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள் மற்றும் வேலைகள் ஒரு SME நிறுவனத்தில் Product Development என்பதை நான் இரண்டு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இருக்கும் பொருள் அல்லது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துதல். இரண்டாவதாக, புதிய பொருள் அல்லது சேவை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம். Product Life Cycle இதனை ஒரு Product Life Cycle - உற்பத்திப் பொருளின் வாழ்க்கை சுழற்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரு பொருளின் விலை நிலவரத்தைக் கீழ்காணும் cost...

Read More →

உங்கள் வளர்ச்சியில் மார்க்கெட்டிங் துறையின் பங்களிப்பு

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 11 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மார்க்கெட்டிங் துறைக்கான வேலைகள் என்னென்ன? மார்க்கெட்டிங் துறையின் நோக்கம் - வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வளர்ச்சிக்கான சரியான சந்தையைக் கண்டுபிடிப்பது, சரியான வாடிக்கையாளர் பிரிவுகளைக் கண்டுபிடிப்பது, அவர்களின் தேவைகளை அறிவது. மார்க்கெட்டிங் துறையை ஒரு நிறுவனத்தின் முகம் என்றே கூறலாம். ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் அறிவது அதன் மார்கெட்டிங்கின் மூலமாகவே. மார்க்கெட்டிங் துறையின் வேலைகளை 6 பிரிவுகளாகப் பிரிக்கலாம். பிராண்ட் உருவாக்கம் பிராண்ட் காட்சிப் படுத்துதல் (Brand Visibility)மார்க்கெட் யுக்தி (Strategy)வாடிக்கையாளர்களுடன் நெருக்கம் / சந்திப்புகள் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் - சந்தையைப் பற்றிய ஆழ்ந்த...

Read More →

KRA & KPI தோல்வி அடைவது ஏன்?

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 10 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs KRA என்பது ஒரு ஒப்பந்தம் KRA என்பது Top Managementக்கும் Middle Managementக்கும் நடுவில் செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். தனது இலக்குகளை டாப் மேனேஜ்மென்ட் வரையறுத்துச் சொல்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான எல்லா ஆதாரங்களையும் (resources) அளிக்கிறது. உதாரணமாக நேரம், பணியாளர்களின் அறிவு மற்றும் உடல் திறன், எந்திரங்கள், இடம், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான அமைப்பு, பிராண்ட் போன்றவை. கொடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்துக்கொண்டு வேண்டிய இலக்கை அடையவேண்டும். அதுதான் துறைத் தலைவருக்கான வேலை. அதே போல், ஒரு KRA வை அடைவதற்காக ஒரு துறைத் தலைவர் தன்...

Read More →

ஒவ்வொரு துறையின் அடிப்படை நோக்கங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 9 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs நீங்கள் ஒரு தோராயமான வடிவமைப்பை வரைந்துவிட்டீர்களா?  கொஞ்சம் இருங்கள் - உடனடியாக ஒரு exel ஷீட் அல்லது பவர்பாயிண்ட் ஸ்லைடைத் திறக்காதீர்கள். இதற்கான சிறந்த கருவி ஒரு whiteboard அல்லது ஒரு பேப்பர்தான். உங்கள் கைகளால் முதலில் வரையுங்கள். பிறகு அதனை நேர்த்திசெய்து ஒரு எக்செல் அல்லது பவர்பாயிண்ட்டில் போட்டுக்கொள்ளலாம். Flat Structure சிறந்ததா அல்லது Vertical Structure சிறந்ததா? பொதுவாக ஒரு நிறுவவனத்தின் நிர்வாக அமைப்பை மாற்றிஅமைக்கும்போது கேட்கப்படும்கேள்வி - குறைவான அதிகார அடுக்குகளையும் - பல கிளைகளையும் கொண்ட தட்டையான அமைப்பு சிறந்ததா அல்லது...

Read More →

முக்காலமும் நிர்வாக வரைபடத்தில்…

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 8 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முக்காலமும் உணர்ந்த ஞானி  அதென்ன Past, Present, Future என்று கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலமாக துறைகளை பிரிதிருக்கிறீர்கள்?  ஆமாம், இந்த ஏழு துறைகளை அமைத்து சரியாக வழிநடத்தி, மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தி,  அவற்றின் மூலம் முடிவுகள் எடுக்கும் போது, ஒரு நிறுவனத் தலைவர் முக்காலமும் உணர்ந்தவர் ஆகலாம். கடந்த காலம் இந்த ஏழு துறைகளில் Accounts & Finance (மற்றும் MIS & Review) துறை கடந்த காலத்தைக் குறிப்பது. அதாவது, பெரும்பாலும் நடந்து முடிந்தவற்றை சரிபார்ப்பது. பட்ஜெட் மற்றும் திட்டமிடல் இருந்தாலும் இத்துறையின் குறிப்பிடத்தகுந்த நேரம்...

Read More →