What is it ?
Lifeline என்பதை உங்கள் நிறுவனத்தின் ஆயுள் ரேகை என்று சொல்லலாம். இது நிறுவனத்தின் கடந்த 60 மாதங்களின் தனித்தனியான விற்பனை அளவைக் காட்டும் ஒரு எளிமையான லைன் சார்ட் (Line Chart) என்ற கிராப் ஆகும்.

என்ன பயன்?
இந்த chart ஐ வைத்து, நிறுவனத்தின் வளர்ச்சி, ஏற்ற இறக்கங்கள், எடுத்த முக்கியமான முடிவுகள், அவற்றின் சாதகங்களை, சரிவுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இலக்கை அடைந்ததா, எவ்வளவு சதவிகிதம் அடைந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம், வரும் ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடையும் என்பதையும் கணிக்கலாம்.
Organisation Lifeline Template
உங்கள் வேலையை எளிமையாக ஏற்கனவே Format செய்யப்பட்ட கிராப் இந்த excel sheet இல் இருக்கிறது. இதில் அறுபது மாதங்களுக்கான விற்பனை மதிப்பை மட்டும் நீங்கள் enter செய்தால் பக்கத்திலேயே கிராப் வந்துவிடும்.
அதனை நீங்கள் எளிமையாக பிரிண்ட் செய்துகொள்ளலாம் (Cntl P) அல்லது PDF ஆக save செய்துகொள்ளலாம்.