உங்கள் ஆனந்தக் கட்டம் எது?
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி - உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா? முரண்பாடான ஆர்வங்கள் பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார். இசைப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் மிகப்பெரிய இசைமேதையாய் வளர்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாத ஒருவர் தனது வீட்டைக் கட்டும்போது மிகப் பக்குவமாகத் திட்டமிட்டு வேலைகளை முடிக்கிறார். உற்பத்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த ஒருவர்...