ஃபோர்டு உற்பத்தி முறை
முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு. ஃபோர்டு மோட்டார் நிறுவனம் போர்டு மோட்டார் நிறுவனம் (புகைப்பட உதவி - விக்கிபீடியா) தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சொந்தமான ஒரு கம்பெனியில் பொறியாளராக வேலை செய்துகொண்டிருந்த போதிலும் பெட்ரோலில் ஓடக்கூடிய வாகனங்களைத் தானே உருவாக்க வேண்டும்...