Pareto Analysis

பரேட்டோ கொள்கை

இத்தாலி நாட்டைச் சேர்ந்த Vilfredo Pareto என்ற சமூக பொருளாதார அறிஞர் ஒரு கூற்றை முன் வைக்கிறார்.

ஒரு சமுதாயத்தின் 20% மக்கள் அதன் 80% செல்வத்தை அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 80% மக்கள் செல்வத்தின் மீதமுள்ள 20% ஐக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்கிறார்கள்.


இந்தக் கொள்கை நாளடைவில் பிற மேனேஜ்மென்ட் துறைகளிலும், இப்போது பொதுவாக அனைத்து துறைகளிலும் பயன் படுத்தப் படுகிறது.

Focus & Priority

இந்தக் கருவியின் முக்கியக் கோட்பாடு – நாம் எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆகும். பரேட்டோ கொள்கையை எளிய முறையில் பார்த்துப் புரிந்துகொள்ள பரேட்டோ சாரட் என்னும் கிராப் பயன்படுத்தப் படுகிறது.

ஒரு சாம்பிள் பரேட்டோ வரைபடம் கீழே இருக்கிறது. இதில், குறுக்குக் கோடு (x axis) நாம் ஆய்வு செய்யும் வகைகள் (வாடிக்கையாளர் பெயர்), அதாவது categoriesஐக் குறிக்கிறது. இடது பக்கம் இருக்கும் நெடுக்கு கோடு , (left y axis) நாம் அளவிடும் அளவீட்டைக் குறிக்கிறது (விற்பனை அளவு). வலது புறம் இருக்கும் நெடுக்குகோடு, அவர்களின் பங்களிப்பைக் குறிக்கிறது.

நீல நிறப் பட்டைகள் குறிப்பிட்ட customer விற்பனை அளவைக் குறிக்கிறது. சிவப்புக் கோடு வாடிக்கையாளர் பங்க்ளிப்பை %இல் காட்டுகிறது. இந்த சிவப்புக் கோட்டில் முதல் 80% பங்களிப்பைக் கொடுக்கும் வாடிக்கையாளர்களே (சிவப்புக் கோட்டுக்கு இடது புறம் இருப்பவர்கள்) நம் Top 20% அல்லது மிக முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர்கள்.

எல்லா விஷயங்களிலும் ஒருசமயத்தில் கவனம் செலுத்துவது என்பது, எங்கும் கவனம் செலுத்தவில்லை என்றே பொருள்படும்.

நம் கவனம், நேரம், முதலீடு போன்றவை மிக முக்கியத்துவம் வாய்ந்த வடிக்கையாளர்களை நோக்கியே செலுத்த வேண்டும்.

நம்முடைய value proposition மற்றும் Business Model அவர்களுக்காகவே இருக்க வேண்டும். மீதமுள்ள வாடிக்கையாளர்களை குறைந்த முக்கியத்தும் கொண்ட வாடிக்கையாளர்களாகக் கருத வேண்டும்.

Pareto Chart Template

சுலபமாக பயன்படுத்தக் கூடிய பரேட்டோ சார்ட் இங்கே Download செய்துகொள்ளலாம்.

இங்கு Category Name என்ற column இல் வாடிக்கையாளர் பெயர் அல்லது segment ஐ enter செய்யவும். அவர்களின் பக்கங்களிப்பை (விற்பனை அளவு) Measure என்ற column இல் பதிவு செய்யவும். உங்கள் பரேட்டோ சார்ட் தயார்.