விற்பனைக்கு தயாராக இருத்தல் – Sales in SMEs – Part 3
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 20 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses. இதுவரை வந்த அத்தியாயங்களில் சிறு நிறுவனங்களில் நிர்வாக அமைப்பு மற்றும் KRA & KPI பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற சில அத்தியாயங்களில் விற்பனைப் பிரிவின் KRA, KPI மற்றும் முக்கியப் பணிகள் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் விற்பனைப் பிரிவில் காலை மாலைக் கூட்டங்கள், ஒருங்கிணைந்த அணிகள், விலகிய ஷிப்ட் முறை மற்றும் சுத்தமான பணியிடம் போன்றவற்றைப் பார்ப்போம். காலை மாலைக் கூட்டங்கள் ஒரு நிறுவனத்தில் KPI பற்றிய விவாதத்தில் அந்த நிறுவனத்தின் CEO சொன்னார் - "சார், நிறைய கம்பெனிகள்ல KPI வெற்றி பெறாததற்குக்...