ஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts

CSense - Interchangeable Parts

1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது. கிரிபேவெல் உற்பத்தி முறை - நெப்போலியனின் ரகசிய ஆயுதம் பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில்...

Read More →

உற்பத்தித் துறையின் வளர்ச்சி

'Manufacturing (உற்பத்தி)' என்றால் என்ன? 'Manufacturing' என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். 'Manu' என்றால் 'செய்தல்' 'facture' என்றால் 'கைகளால்'. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு 'கைகளால் செய்தல்' என்றே கொள்ளவேண்டும். ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்தப் புரட்சி, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது. ஜவுளித் தயாரிப்பு, சுரங்கம், இரும்பு உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் அனைத்தும் முழுமையான மாற்றத்தைச் சந்தித்தன....

Read More →