Strategy Canvas (Tamil)

Strategy Canvas என்றால் என்ன?

வாடிக்கையாளரின் தேவைகள், முக்கியத்துவங்கள் போன்ற அளவீடுகளில், நமது performance-ஐ போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு அதிலிருந்து நம் strategyஐத் வகுக்கும் ஒரு கருவிதான் strategy கேன்வாஸ்.

இது ஒரு x-y எனப்படும் ஒரு எளிமையான கிராப். பெயருக்குத் தகுந்த மாதிரி, இது ஒரு பெரிய தாளில் பிரிண்ட் எடுத்து பார்க்க வேண்டிய ஒரு கிராப்.

உங்கள் நிறுவனத்தின் Strategy Canvas-ஐ எப்படி உருவாக்குவது?

முதலில் உங்கள் Value Proposition ஐ வரையறுத்துக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் குழுவுடன் ஆலோசித்து, வாடிக்கையாளர் பார்வையில் முக்கியமாக நம் பொருள், சேவை மற்றும் வாடிக்கையாளர்களைக் கையாள்வது போன்ற விஷயங்களில் 20 விசயங்களைப் பட்டியல் இடுங்கள்.

பிறகு, உங்கள் நிறுவனம் மற்றும் போட்டியாளர்களின் நிறுவனங்களை அந்த 20 விஷயங்களின் அவர்களின் performanceக்கு மதிப்பெண் கொடுங்கள். மிக மோசம் – 1 மதிப்பெண், மிகச்சிறப்பு – 10 மதிப்பெண். இங்கு எதற்கும் 5 மதிப்பெண்கள் கொடுக்காதீர்கள் – அது மதில் மேல் பூனை மாதிரி, முடிவெடுக்கத் தெரியாத நிலை.

இப்போது இந்த மதிப்பெண்களை ஓர் Excel Sheet-இல் Line Chart ஆக மாற்றுங்கள். உங்கள் வசதிக்காக ஏற்கனவே format செய்யப்பட்ட Excel Sheet ஐ இங்கு Download செய்துகொள்ளலாம்.

இங்கு ‘Data’ என்ற sheetஇல் உங்கள் parameterகளையும் score ஐயும் பதிவு செய்தால், Graph என்ற sheetஇல் உங்கள் strategy canvas தயார்.

Strategy Development

நாம் எங்கு வலிமையாக இருக்கிறோம், எங்கு பலவீனமாக இருக்கிறோம் என்று இந்த கேன்வாஸ் காட்டிவிடும்.

இங்கு நீங்கள் 4 விதமாக வியூகம் வகுக்கலாம் (Strategy)

Introduce

வாடிக்கையாளர் மிக முக்கியமான தேவையாக ஒரு விஷயத்தை நினைக்கிறார். ஆனால் உங்கள் நிறுவனம் உட்பட சந்தையில் அந்த வசதியை யாருமே வழங்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். Blue Ocean Strategy இன் படி – இந்த வசதியை நீங்கள் அறிமுகப் படுத்துவதன் மூலம் உங்கள் நிறுவனம் தனித்துத் தெரிவதுடன் உங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆக்கிவிடும்.

Improve

நம் வலிமையை மேலும் வலிமையாக்குவது – போட்டியாளர்களை விட எப்போது நம் வலிமையான காராணிகளில் முந்தியே இருப்பது.

Reduce

ஒரு parameter-இல் போட்டியாளர்களைக் காட்டிலும் நாம் மிகப் பின்தங்கி இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் நம் கவனத்தையும், நேரத்தையும், பணத்தையும் இங்கு செலவிடாமல், நிலவரத்தை மாற்றாமல் – நம் வாடிக்கையாளர் செக்மென்ட்டை நமக்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அங்கு சிறப்பான சேவை கொடுப்பதன் மூலம் நம் விற்பனையை அதிகப் படுத்தலாம்.

அந்த நேரத்தில், நமக்கு சிறப்பாக வராத சில காரணிகளை கவனத்தைக் குறைத்துக் கொள்வது இந்த வழி.

Eliminate

சில நேரங்களில், நாம் மிக முக்கியமாக நினைத்து, நிறைய செலவழித்து, ஒரு வசதியை வாடிக்கையாளருக்கு வழங்குகிறோம். ஆனால், அந்தக் காரணி வாடிக்கையாளர் தேவையில் முக்கியமானதாக இல்லை என்று வைத்துக்கொள்வோம். அதே சமயம் நம்மை விட சிறப்பாக செயல்படும் போட்டியாளர்கள் இந்த குறிப்பிட்ட சேவையை வழங்கவில்லை. இந்த நிலையில் நாம் உடனடியாக அந்த parameter ஐ நமது சேவையிலிருந்து நீக்க வேண்டும். அதன் மூலம் நம் செலவு மற்றும் சிக்கல்கள் குறைவதுடன், சந்தையில் நாம் competitive ஆக வரமுடியும்.