ஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts
1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது. கிரிபேவெல் உற்பத்தி முறை - நெப்போலியனின் ரகசிய ஆயுதம் பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில்...