Customer Segmentation
வாடிக்கையாளர் பகுப்பு ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் திருப்தியே அந்த நிறுவனத்தின் வெற்றியையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது. ஆனால் அந்த வெற்றி, ஒவ்வொரு வாடிக்கையாளரையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்யும்போது மட்டுமே சாத்தியமாகிறது. இந்த அத்தியாயத்தில் நம் கஸ்டமரை எப்படி செக்மெண்ட் செய்வது என்பதைப் பற்றிப் பேசுவோம். Customer Segmentation ஏன் முக்கியம்? சென்னைல திநகர் மாதிரியான ஒரு இடம். அங்க, நூற்றுக்கணக்கான துணிக்கடைகள் இருக்கு. நான் அடிக்கடி கவனிக்கிற இடம் பனகல் பார்க் பின்னால இருக்கும் R - - V மற்றும் ச - - - ணா ஸ்டோர்ஸ். இந்த ரெண்டு கடைகள். இதில் ஒரு கடைக்குப் போகிற மக்கள் ரெண்டாவது கடைக்குள்ள போவதில்லை....