5S விளையாட்டு
நம்மில் பெரும்பாலோர் 5S முறையை வெறும் Housekeeping உத்தியாகவே கருதுகிறோம். உண்மையில் housekeeping 5S இன் ஒரு பகுதி மட்டுமே. 5S இன் முழுப் பலன் மிகப் பெரியது. 5S என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் தொடக்கப் புள்ளியாகவும், மக்கள் ஈடுபாட்டிற்கான எளிமையான வழிமுறையாகவும் பயன்படுகிறது. பல 5S பயிற்சி வகுப்புகள் மற்றும் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியாக, 5S விளையாட்டை பகிர விரும்புகிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா? இந்த விளையாட்டு 5S முறையின் செயலாக்கம் மற்றும் பயன்களைச் சித்தரிக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுவது மிக சுலபம். அலுவலகத்திலோ பயிற்சி வகுப்பறைகளிலோ 5S Game Sheets மற்றும் இரண்டு வெவ்வேறு வண்ண பேனாக்கள் பயன்படுத்தி இதனை ஒரு மேசை மீதே எளிமையாக விளையாட முடியும்....