தற்போதைய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?
பொருளாதார மந்த நிலை - உண்மையா மாயையா? ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் தூண்டுதல்கள் எவ்வாறு, எவ்வளவு விரைவில் இந்நிலையை மாற்றப் போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு SME உரிமையாளராக, மந்தநிலையை...