நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 6 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒருவரின் ஆளுமைகளின் அடிப்படையில் அவரது விருப்பங்கள் மாறுபடும் என்பதையும், நான்கு விதமான ஆளுமைக் கட்டங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேலும் ஒருவருக்கு மனநிறைவைத் தரக்கூடிய ஆனந்தக் கட்டத்தைப் பற்றியும் பார்த்தோம். இங்கு அந்த 4 அடிப்படை ஆளுமைகள் (Personalities) குறித்தும், அவற்றிற்கு சாதகமான துறைகள் குறித்தும் பார்க்கலாம். 4 அடிப்படையான ஆளுமைகள் கட்டம் I இந்தக் கட்டத்தில் இருப்பவருக்கு புதிய மனிதர்களை சந்திப்பதும், புதிய இடங்களுக்குப் போவதும் ஓர் உத்வேகத்தைத் தரும். தன்னுடைய தோற்றத்தையும், ஆளுமையையும் எளிதாகப் பயன்படுத்தி காரியத்தை சாதிக்க வல்லவர்கள். பெரும்பாலும் இவர்கள் நேரில்...