தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் - ஏன் - ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல பணியாளராக இருக்கும் ஒருவர் தனது ஊரில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர் முன்னின்று கோவில் கட்டிக்கொண்டிருப்பர்; ஊர்த்திருவிழாவை நடத்திக் கொடுப்பார். அங்கே அவர் தலைவர் கேரக்டர். ஆனால், பாக்டரியில் கொடுத்த வேலையை மட்டும்...