விற்பனைத் துறையின் நோக்கம்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 15 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs விற்பனைத் துறையின் முக்கியத்துவம் ஒரு SME நிறுவனத்தில் பொருள் ஈட்டும் இரண்டு துறைகள் - உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையாகும். ஒரு நிறுவனத்தின் விற்பனைத் துறையே அதன் பலம். மிகப்பெரிய நிறுவனங்களான ITC, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற FMCG நிறுவனங்களின் பின்புலம் அவர்களது பணபலம் அல்லது அவர்கள் டிவியில் கொடுக்கும் விளம்பரங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக - அவர்களின் ஆணிவேர் போல் நின்று அவர்களை வளர்ப்பது அவர்களது விற்பனைத் துறையாகும். அவர்களின் விற்பனை வலையின் பலம் என்னவென்றால் அவர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திய ஒரு...