Cost of Poor Management (CoPM) என்றால் என்ன?
ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர வேண்டும் என்றால் அது எந்தத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்? புதுமைகளைப் புகுத்தும் R&D, புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க மார்க்கெட்டிங், தரத்தை மேம்படுத்த Operations, என எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் விற்பனைத் துறை என்பது வளர்ச்சியின் அஸ்திவாரம் போன்றது. அந்தத் துறைதான் ஒரு நிறுவனம் வளருமா, வளராதா என்பதைத் தீர்மானிக்கிறது. நாம் ஏற்கனவே விவாதித்தது போல, விற்பனை என்பது வாடிக்கையாளர்களிடம் நம் பொருட்களை விற்பனை செய்வது மட்டும் அல்ல. அதை விட முக்கியமாக அவர்களைத் தக்கவைத்துக் கொள்வது. மேற்கண்ட அத்தனை முயற்சியிலும் ஒரு நிறுவனம் வெற்றிபெற்றாலும் வரும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அந்நிறுவனம் பெரிய வளர்ச்சியை அடையவே முடியாது....