விற்பனைக்குத் தயாராக இருத்தல் – பகுதி 1 – Inventory Turns
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 18 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு salesHOD-இன் KRA, உள் விற்பனையில் வாடிக்கையாளர் சார்ந்த செயல்முறைகளையும் (customer related processes) அவற்றின் அளவீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வரும் அத்தியாயங்களில் உள்விற்பனையில், விற்பனைத் துறையின் கடை சார்ந்த வேலைகள் பற்றி பார்ப்போம். இந்த அத்தியாயத்தில் எப்படி விற்பனைக்குத் தயாராவது என்பதில் - கடையின் கொள்ளளவு, சதுர அடிக்கான லாபம் மற்றும் சரக்கு சுழற்சி பற்றி விவாதிப்போம். தயார் நிலை 'அதிர்ஷ்டம் தயாராக இருப்பவர்களுக்கே துணை செய்யும்' என்று சொல்வதுண்டு. அதேபோல, தயாராக இருக்கும்போதுதான் ஒரு...