திருப்புமுனை
ஒரு நீண்ட பயணம் உற்பத்தித் தரம் மற்றும் உற்பத்தித் திறனில் இன்றைய தொழில் நிறுவனங்கள் அடைந்திருக்கும் மிக உயர்ந்த நிலை ஓரிரு நாட்களை உருவாகவில்லை. யாரும் இதனைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. ஒவ்வொரு வழிமுறையும் பல ஆண்டு அனுபவங்களால் பலரது நஷ்டங்களுக்குப் பிறகே வடிவம் பெற்றன. உற்பத்திப் பொருட்களின் தரம் ஒரு நூற்றாண்டிற்கு முன்புதான் வணிகத்தில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. படிப்படியாக, தரம் சார்ந்த சிந்தனைகள் வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம் வாழ்கை நிலை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S, போன்ற பல வழிமுறைகள் இவ்வாறு உருவானவையே. இந்த வழிமுறைகளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றத்தையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஜப்பான்...