Statistical Process Control
நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் டைம் அண்ட் மோஷன் அணுகுமுறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அணுகுமுறை ஆகியவை பிரபலமடைஞ்சு பல உலக நாடுகள்ல அதை வரவேற்றாங்க. ஃபோர்ட்டின் வேலை பகுப்பு (fragmentation) வேலைகளை சிறு சிறு செயல்களாகப் பிரித்தது. இதனால் நாளடைவில் Process அடிப்படையிலான டிபார்ட்மெண்ட்கள் தோன்றின. ஒவ்வொரு துறையில் இருந்தவர்களும் அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் திரும்பத் திரும்ப செய்துகிட்டு வந்தாங்க. அவங்க வேலைக்கு முன் அந்தப் பொருள்ல என்ன வேலை நடந்தது, அதை யார் பண்ணாங்க என்பது பற்றி அவங்க தெரிஞ்சுக்க நினைக்கல - தெரிஞ்சுக்கவும் முடியாது. அன்ஸ்கில்டு (unskilled) அல்லது புதிய பணியாளர்களை ஸ்கில்ட் பணியாளர்கள் மேற்பார்வை பார்க்கும் சூப்பர்வைசிங் முறை நடைமுறைக்கு வந்தது....