வாடிக்கையாளர் பகுப்பு ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் திருப்தியே அந்த நிறுவனத்தின் வெற்றியையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது. ஆனால் அந்த வெற்றி, ஒவ்வொரு வாடிக்கையாளரையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்யும்போது மட்டுமே சாத்தியமாகிறது. இந்த அத்தியாயத்தில் நம் கஸ்டமரை எப்படி செக்மெண்ட் செய்வது என்பதைப் பற்றிப் பேசுவோம். Customer Segmentation ஏன் முக்கியம்? சென்னைல திநகர் மாதிரியான ஒரு இடம். அங்க, நூற்றுக்கணக்கான துணிக்கடைகள் இருக்கு. நான் அடிக்கடி கவனிக்கிற இடம் பனகல் பார்க் பின்னால இருக்கும் R - - V மற்றும் ச - - - ணா ஸ்டோர்ஸ். இந்த ரெண்டு கடைகள். இதில் ஒரு கடைக்குப் போகிற மக்கள் ரெண்டாவது கடைக்குள்ள போவதில்லை....
ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர வேண்டும் என்றால் அது எந்தத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்? புதுமைகளைப் புகுத்தும் R&D, புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க மார்க்கெட்டிங், தரத்தை மேம்படுத்த Operations, என எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் விற்பனைத் துறை என்பது வளர்ச்சியின் அஸ்திவாரம் போன்றது. அந்தத் துறைதான் ஒரு நிறுவனம் வளருமா, வளராதா என்பதைத் தீர்மானிக்கிறது. நாம் ஏற்கனவே விவாதித்தது போல, விற்பனை என்பது வாடிக்கையாளர்களிடம் நம் பொருட்களை விற்பனை செய்வது மட்டும் அல்ல. அதை விட முக்கியமாக அவர்களைத் தக்கவைத்துக் கொள்வது. மேற்கண்ட அத்தனை முயற்சியிலும் ஒரு நிறுவனம் வெற்றிபெற்றாலும் வரும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அந்நிறுவனம் பெரிய வளர்ச்சியை அடையவே முடியாது....
The process of business in simple terms, starts with identifying the customers and their requirements in the area that is accessible to you. Once you identified their needs, you proceed to find or create a suitable solution for them and approach them. You create a set of processes to provide the solutions consistently. At the same time, you start procuring the resources, infrastructure, material and machinery. You manufacture or stock or display your solutions, as per your business model. Then...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 20 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses. இதுவரை வந்த அத்தியாயங்களில் சிறு நிறுவனங்களில் நிர்வாக அமைப்பு மற்றும் KRA & KPI பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற சில அத்தியாயங்களில் விற்பனைப் பிரிவின் KRA, KPI மற்றும் முக்கியப் பணிகள் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் விற்பனைப் பிரிவில் காலை மாலைக் கூட்டங்கள், ஒருங்கிணைந்த அணிகள், விலகிய ஷிப்ட் முறை மற்றும் சுத்தமான பணியிடம் போன்றவற்றைப் பார்ப்போம். காலை மாலைக் கூட்டங்கள் ஒரு நிறுவனத்தில் KPI பற்றிய விவாதத்தில் அந்த நிறுவனத்தின் CEO சொன்னார் - "சார், நிறைய கம்பெனிகள்ல KPI வெற்றி பெறாததற்குக்...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 19 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses. சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு கடையின் கொள்ளளவைத் தெரிந்து கொண்டு அதனை திறம்பட பயன்படுத்துதல், சரியான அளவில் சரக்குக் கையிருப்பை நிர்வகித்தல் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் கடை சார்ந்த வேலைகளைப் பற்றிப் பார்ப்போம். குறிப்பாக விற்பனைப் பிரதிநிதிகளைத் தயார் செய்தல், வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்துதல் போன்றவற்றை விவாதிப்போம். 'விற்பனைப் பிரதிநிதிகளைத் தயார் செய்தல்' பகுதியில் நாம் கீழ்காணும் தலைப்புகளை இனிவரும் அத்தியாயங்களில் விவாதிப்போம். சராசரியின் விதிபயிற்சி காலை மாலைக் கூட்டம்ஒருங்கிணைந்த குழுக்கள் (Pooled resources)சுத்தமான பணியிடம் பணியிடை ஓய்வு விலகிய ஷிப்ட்...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 18 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு salesHOD-இன் KRA, உள் விற்பனையில் வாடிக்கையாளர் சார்ந்த செயல்முறைகளையும் (customer related processes) அவற்றின் அளவீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வரும் அத்தியாயங்களில் உள்விற்பனையில், விற்பனைத் துறையின் கடை சார்ந்த வேலைகள் பற்றி பார்ப்போம். இந்த அத்தியாயத்தில் எப்படி விற்பனைக்குத் தயாராவது என்பதில் - கடையின் கொள்ளளவு, சதுர அடிக்கான லாபம் மற்றும் சரக்கு சுழற்சி பற்றி விவாதிப்போம். தயார் நிலை 'அதிர்ஷ்டம் தயாராக இருப்பவர்களுக்கே துணை செய்யும்' என்று சொல்வதுண்டு. அதேபோல, தயாராக இருக்கும்போதுதான் ஒரு...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 17 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs உள் மற்றும் வெளி விற்பனை விற்பனைத் துறையை விற்பனை நடக்கும் முறையை வைத்து உள் விற்பனை (Over the Counter Sales) மற்றும் வெளி விற்பனை (Traveling Sales) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உள் விற்பனை என்பது வாடிக்கையாளர் நமது நிறுவனத்தை அல்லது கடையை அல்லது நமது இணைய தளத்தைத் தேடிவந்து வாங்கிச்செல்வது. வெளிவிற்பனை என்பது நமது விற்பனைப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர் இருக்கும் இடங்களுக்குச் சென்று விற்பனை செய்வது. முதலில் நாம் உள் விற்பனையைப் பற்றி பார்ப்போம். உள் விற்பனை Sales HODஇன் KRAக்கள் மிக...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 16 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை கடந்த அத்தியாயங்களில் ஒரு SME நிறுவனத்திற்கு Organisation Structure ஏன் அவசியம் என்பதையும், எத்தனைத் துறைகள், என்னென்ன துறைகள் இருக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம். தொடர்ந்து துறைகள் எந்தக் காலத்தைக் குறிக்கின்றன (மார்க்கெட்டிங், Process & Product Development, People Development - Future / Sales, Operations, Admin & Welfare - Present / Accounts, MIS - Past) ஒரு நிறுவனர் எந்தக் காலத்தில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதையும் பார்த்தோம். இதற்கு முந்தைய சில அத்தியாயங்களில் மார்க்கெட்டிங் துறை, மேம்பாட்டுத்...
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 15 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs விற்பனைத் துறையின் முக்கியத்துவம் ஒரு SME நிறுவனத்தில் பொருள் ஈட்டும் இரண்டு துறைகள் - உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையாகும். ஒரு நிறுவனத்தின் விற்பனைத் துறையே அதன் பலம். மிகப்பெரிய நிறுவனங்களான ITC, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற FMCG நிறுவனங்களின் பின்புலம் அவர்களது பணபலம் அல்லது அவர்கள் டிவியில் கொடுக்கும் விளம்பரங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக - அவர்களின் ஆணிவேர் போல் நின்று அவர்களை வளர்ப்பது அவர்களது விற்பனைத் துறையாகும். அவர்களின் விற்பனை வலையின் பலம் என்னவென்றால் அவர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திய ஒரு...