Ansoff Matrix (Tamil)
ஆன்சாப் மேட்ரிக்ஸின் முக்கியத்துவம் அகர முதல எழுத்தெல்லாம் Ansoff Matrix முதற்றே Strategy. இப்படி சொன்னால் தப்பே இல்ல. அந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் strategyஐ வடிவமைப்பதில் Ansoff Matrix (இனி தமிழ்ல ஆன்சாப் மேட்ரிக்ஸ்-னு சொல்வோம்) பயன்படுகிறது. உங்க நிறுவனத்திற்கு அடுத்த வருடத்திற்கான விற்பனை இலக்கை நிர்ணயித்த பிறகு அந்த இலக்கை எப்படி அடைவதுன்னு ஒரு கேள்வி வரும். அப்படி வரும்போது அந்த மீட்டிங்கில் இருக்கும் மேனேஜர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வார்கள். யார் முதலில் ஆரம்பிப்பது அப்படின்னு. பல நேரங்கள்ல இப்படித் தெளிவில்லாமல் டார்கெட்டை அடையணும்னு திட்டமிடும் போது குழப்பம் தான் மிஞ்சும். அதுமட்டும் இல்லாம நம்ம டீமுக்கு போகும் திசை சரியா தெரியாம - இலக்கை எட்டாம கம்பெனி தோல்வி...