SME வளர்ச்சி Vs கார்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 4 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இப்போது உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. பலபேர் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாகவே புலம்புவது கேட்கிறது. உங்களுக்குள் எழும் சந்தேகங்கள் நீங்க சொல்றபடி பார்த்தா, நான் கல்லாவுலேயே உட்காரக் கூடாதோ? என்ன சார், நடக்கற விஷயமா பேசுங்க. இந்தக் காலத்துல யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறது? ஒருத்தனும் சரியில்லை சார். நாங்க எல்லாம் சின்ன கம்பெனி சார். நீங்க சொல்ற மாதிரி நிறைய மேனேஜர்களெல்லாம் போட முடியாது. இதெல்லாம் கார்பரேட் கம்பனிக்கு வேணும்னா ஒத்துவரும். நான் கஸ்டமரைப் போய்ப் பார்த்தாதான்...