ஒவ்வொரு துறையின் அடிப்படை நோக்கங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 9 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs நீங்கள் ஒரு தோராயமான வடிவமைப்பை வரைந்துவிட்டீர்களா?  கொஞ்சம் இருங்கள் - உடனடியாக ஒரு exel ஷீட் அல்லது பவர்பாயிண்ட் ஸ்லைடைத் திறக்காதீர்கள். இதற்கான சிறந்த கருவி ஒரு whiteboard அல்லது ஒரு பேப்பர்தான். உங்கள் கைகளால் முதலில் வரையுங்கள். பிறகு அதனை நேர்த்திசெய்து ஒரு எக்செல் அல்லது பவர்பாயிண்ட்டில் போட்டுக்கொள்ளலாம். Flat Structure சிறந்ததா அல்லது Vertical Structure சிறந்ததா? பொதுவாக ஒரு நிறுவவனத்தின் நிர்வாக அமைப்பை மாற்றிஅமைக்கும்போது கேட்கப்படும்கேள்வி - குறைவான அதிகார அடுக்குகளையும் - பல கிளைகளையும் கொண்ட தட்டையான அமைப்பு சிறந்ததா அல்லது...

Read More →

முக்காலமும் நிர்வாக வரைபடத்தில்…

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 8 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முக்காலமும் உணர்ந்த ஞானி  அதென்ன Past, Present, Future என்று கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலமாக துறைகளை பிரிதிருக்கிறீர்கள்?  ஆமாம், இந்த ஏழு துறைகளை அமைத்து சரியாக வழிநடத்தி, மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தி,  அவற்றின் மூலம் முடிவுகள் எடுக்கும் போது, ஒரு நிறுவனத் தலைவர் முக்காலமும் உணர்ந்தவர் ஆகலாம். கடந்த காலம் இந்த ஏழு துறைகளில் Accounts & Finance (மற்றும் MIS & Review) துறை கடந்த காலத்தைக் குறிப்பது. அதாவது, பெரும்பாலும் நடந்து முடிந்தவற்றை சரிபார்ப்பது. பட்ஜெட் மற்றும் திட்டமிடல் இருந்தாலும் இத்துறையின் குறிப்பிடத்தகுந்த நேரம்...

Read More →

ஒரு நிறுவனத்திற்கு எத்தனை துறைகள் தேவை?

CSense - Balanced Business Ride

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 7 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை ஒரு சிறுதொழில் நிறுவனம் பெருநிறுவனமாக மாறும் பயணத்தில் தடைக்கற்களாக வரும் 5 காரணிகளைப் பார்த்தோம். குறிப்பாக வளர்ச்சியின் படிநிலைகளை உணராமலிருப்பது, ஆனந்தக் கட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது, மற்றும் நிர்வாக வரைபடம் இல்லாததால் கனவுகளை செயல்படுத்த முடியாமல் போவது ஆகிய மூன்று காரணிகளை விரிவாக்கப் பார்த்தோம். தொடர்ந்து, ஒரு நிறுவனத்திற்கு ஏன் நிர்வாக வரைபடம் எனும் Organisation Structure அவசியம் என்பது பற்றியும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை துறைகள் இருக்க வேண்டும், அவை என்னென்ன என்று பார்ப்போம். எத்தனை துறைகள்?...

Read More →

நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 6 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒருவரின் ஆளுமைகளின் அடிப்படையில் அவரது விருப்பங்கள் மாறுபடும் என்பதையும், நான்கு விதமான ஆளுமைக் கட்டங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேலும் ஒருவருக்கு மனநிறைவைத் தரக்கூடிய ஆனந்தக் கட்டத்தைப் பற்றியும் பார்த்தோம். இங்கு அந்த 4 அடிப்படை ஆளுமைகள் (Personalities) குறித்தும், அவற்றிற்கு சாதகமான துறைகள் குறித்தும் பார்க்கலாம். 4  அடிப்படையான ஆளுமைகள் கட்டம் I இந்தக் கட்டத்தில் இருப்பவருக்கு புதிய மனிதர்களை சந்திப்பதும், புதிய இடங்களுக்குப் போவதும் ஓர் உத்வேகத்தைத் தரும். தன்னுடைய தோற்றத்தையும், ஆளுமையையும் எளிதாகப் பயன்படுத்தி காரியத்தை சாதிக்க வல்லவர்கள். பெரும்பாலும் இவர்கள் நேரில்...

Read More →

உங்கள் ஆனந்தக் கட்டம் எது?

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி - உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா? முரண்பாடான ஆர்வங்கள் பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார்.  இசைப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் மிகப்பெரிய இசைமேதையாய் வளர்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாத ஒருவர் தனது வீட்டைக் கட்டும்போது மிகப் பக்குவமாகத் திட்டமிட்டு வேலைகளை முடிக்கிறார். உற்பத்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த ஒருவர்...

Read More →

SME வளர்ச்சி Vs கார்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 4 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இப்போது உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. பலபேர் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாகவே புலம்புவது கேட்கிறது. உங்களுக்குள் எழும் சந்தேகங்கள் நீங்க சொல்றபடி பார்த்தா, நான் கல்லாவுலேயே உட்காரக் கூடாதோ? என்ன சார், நடக்கற விஷயமா பேசுங்க.  இந்தக் காலத்துல யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறது? ஒருத்தனும் சரியில்லை சார். நாங்க எல்லாம் சின்ன கம்பெனி சார். நீங்க சொல்ற மாதிரி நிறைய மேனேஜர்களெல்லாம் போட முடியாது. இதெல்லாம் கார்பரேட் கம்பனிக்கு வேணும்னா ஒத்துவரும். நான் கஸ்டமரைப் போய்ப் பார்த்தாதான்...

Read More →

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் - ஏன் - ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல பணியாளராக இருக்கும் ஒருவர் தனது ஊரில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர் முன்னின்று கோவில் கட்டிக்கொண்டிருப்பர்; ஊர்த்திருவிழாவை நடத்திக் கொடுப்பார். அங்கே அவர் தலைவர் கேரக்டர். ஆனால், பாக்டரியில் கொடுத்த வேலையை மட்டும்...

Read More →

கொரோனாவை வெல்வோம்

ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள். 1. மனஉறுதியே மருந்து  வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை.  உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தைரியத்தைக்கொடுங்கள். உலகம் இப்போது அழியப்போவதில்லை. சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. 2. நாளையைப் பற்றிக் குழப்பம் வேண்டாம்  நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று அறுதி இட்டுக் கூற முடியாத...

Read More →

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! - Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து ‘எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டும்’ என்று வேண்டுவோம். அதன் மூலம், அந்த செயலின் முடிவை நாம் நினைத்துப் பார்த்தபின் அந்தசெயலைத் தொடங்குவோம். இதைத்தான் ஸ்டீவன் கோவே, தனது 7 Habits of Highly Successful...

Read More →

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 1 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை.  ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர் தனக்கு ‘ஊக்கம் தரும் வேலைகள்’ பற்றி அறியாமல் இருப்பது; (Joyous Quadrant என்ற இந்தக் கருத்தைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்). தன் நிறுவனத்திற்கு வடிவம்  கொடுக்காமல் இருப்பது; அதனால் கனவுகளை செயல்களாக...

Read More →