மனத் தடைகளைத் தாண்டி சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம்
சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம் 2020ல் நம் இந்தியா வல்லமை மிக்க நாடாகத் திகழவேண்டும் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட கனவு. ஆனால் இன்றும் அந்த ஆண்டைத்தான் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றும் அந்த ஆண்டு நிர்ணயிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, பெரும்பங்கு அதன் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சியை சார்ந்தே அமையும். தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் இதைப்பற்றிப் பேசியவுடன், நாம் கண்முன் வருவது, வளர்ச்சியடைந்த – மேற்கத்திய நாடுகள் மற்றும் அவற்றின் தொழில்துறை. நாம் அவர்களைப் போல் வளர வேண்டும்; அந்த நாட்டில் இருப்பதுபோல் மிகப் பெரிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது தான். இதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அவர்களைப் போல் வளர நாம் அவர்களைப்...