நம்மில் பெரும்பாலோர் 5S முறையை வெறும் Housekeeping உத்தியாகவே கருதுகிறோம். உண்மையில் housekeeping 5S இன் ஒரு பகுதி மட்டுமே. 5S இன் முழுப் பலன் மிகப் பெரியது.
5S என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் தொடக்கப் புள்ளியாகவும், மக்கள் ஈடுபாட்டிற்கான எளிமையான வழிமுறையாகவும் பயன்படுகிறது.
பல 5S பயிற்சி வகுப்புகள் மற்றும் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியாக, 5S விளையாட்டை பகிர விரும்புகிறேன்.
ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?
இந்த விளையாட்டு 5S முறையின் செயலாக்கம் மற்றும் பயன்களைச் சித்தரிக்கிறது.
இந்த விளையாட்டை விளையாடுவது மிக சுலபம். அலுவலகத்திலோ பயிற்சி வகுப்பறைகளிலோ 5S Game Sheets மற்றும் இரண்டு வெவ்வேறு வண்ண பேனாக்கள் பயன்படுத்தி இதனை ஒரு மேசை மீதே எளிமையாக விளையாட முடியும்.
5ஸ் Training நடத்தும்போது 5S இன் ஒவ்வொரு படிநிலையிலும் தேவை மற்றும் அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
முன்னேற்பாடுகள்
விளையாட்டுத் தாள்களின் நகல்கள் மற்றும் பல நீலம் & சிவப்பு பேனாக்களைத் தவிர, இந்த விளையாட்டை விளையாடுவதற்கு எந்த முன்னேற்பாடும் தேவை இல்லை.
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை, இருப்பினும் இது 4 முதல் 20 உறுப்பினர்களுக்கு இடையில் திறம்பட விளையாட முடியும்.
விளையாட்டு திட்டம்
இதில் 6 சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தாள் மொத்தம் ஆறு தாள்கள் உள்ளன.
பங்கேற்பாளர்களை 2 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக உருவாக்குங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு குழுவிடம் ஒரு தாளை மட்டுமே வரிசைப்படி வழங்கவும். பேனா / பென்சில் பயன்படுத்தி ஒன்று முதல் அறுபது வரை எண்களை ஒரு கோட்டால் இணைக்க வேண்டும். இதுதான் இலக்கு. கொடுக்கப்படும் நேரம் – 30 விநாடிகள்.
இடையில் எந்த எண்ணையும் தவிர்க்காமல், வரிசையில் எண்களை இணைத்து கோடு வரையப்பட வேண்டும்.
சுற்று 1: நமது தொழிற்சாலை
இந்த சுற்று, 5 எஸ் பயன்பாடு இல்லாத, ஒரு வழக்கமான உற்பத்தி தளத்தின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
பொதுவாக, 10 முதல் 15 வரை இணைப்பது கடினம்.
சுற்று 2: 1S அகற்று
1S கேள்விகள்
ஒவ்வொரு உபகரணம் / பொருளை அடையாளம் காணவும்
கேளுங்கள் – இது பயன்படுத்தக்கூடியதா?
ஆம் எனில், கேளுங்கள் – இது இங்கே பயன்படுத்தப்படுமா?
ஆம் எனில், கேளுங்கள் – இப்போது தேவைப்படுகிறதா?
ஆம் எனில், கேளுங்கள் – இதற்கு இது அதிகம் தேவையா?
மேலே உள்ள ஏதேனும் கேள்விக்கு “இல்லை” என்ற பதில் கிடைத்தால், அந்த பொருளுக்கு ஒரு RED TAG ஐ இணைத்து, அதை RED TAG AREA க்கு நகர்த்தவும்.
இந்த விளையாட்டில், பங்கேற்பாளர்களை சிவப்பு பேனாவைப் பயன்படுத்தி சுற்று 1 இன் தாளில் தேவையற்ற பொருட்களை குறிக்கச் சொல்லவும் (strike அல்லது circle ).
பின்னர் தேவையற்ற பொருட்கள் அனைத்தும் தளத்திலிருந்து அகற்றப்பட்டதாகக் கூறி, சுற்று 2 இன் தாளை வெளியிடுங்கள்.
பின்னர், ஸ்டாப்வாட்சைத் தொடங்கி, 1 முதல் 60 வரையிலான எண்களை இணைக்கச் சொல்லுங்கள்.
இந்த சுற்றில், அவர்கள் எளிதாக இன்னும் அதிகமான எண்களைக் கண்டுபிடிப்பார்கள்.
முடிவு:
தளத்தில் தெரிவுநிலை மேம்படுத்தப்பட்டது.
தேவையான பொருட்களைக் கண்டுபிடிப்பது எளிதானது.
தளத்தின் வழியாக செல்வது எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாறிவிட்டது.
உற்பத்தித்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டது.
சுற்று 3: 2S – அடுக்கி வை
2S இன் குறிக்கோள், தளத்தில் உள்ளவர்களின் தேடல் மற்றும் தேவையற்ற நகர்வுகளைக் குறைப்பதாகும்.
தாளில் தேவையான பொருட்களின் எவ்வாறு அடுக்கலாம் என்று பங்கேற்பாளர்களிடம் பரிந்துரை கேளுங்கள். இது சுலபமானது! எங்களை அவற்றின் வரிசைப்படி ஒழுங்கமைக்க வேண்டும்.
தாள் 3 ஐ அவர்களுக்குக் கொடுத்து, பணியை மீண்டும் 60 வரை எங்களை இணைக்கச் சொல்லுங்கள்.
முடிவுகள் மேம்பட்டிருப்பதை நீங்கள் காணமுடியும். மேலும் அவர்கள் 30 விநாடிகளுக்குள் பணியை முடித்துவிடுவராகள்.
சுற்று 4: 3S – அழகாய் வை
இந்த சுற்றை விளையாடும்போது, பங்கேற்பாளருக்கு ஒரு வெளிப்படையான மாற்றம் புலப்படும். இப்போது அவர்கள் எண்களின் இருப்பிடத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நேரங்களில், இந்த சுற்றின் போது மட்டுமே 36 என்ற எண் தாளில் இல்லை என்பதை குழுவினர் கண்டுபிடிப்பார்கள்.
வழக்கமான சுத்தம் செய்யவேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.
Cleaning is Inspection
சுற்று 5: 4S – அமைப்பாக்கு
சுற்று 4 இல் , பங்கேற்பாளர்கள் 30 விநாடிகளுக்குள் ஒன்று முதல் அறுபது வரை எண்களை இணைக்கும் பணியை வசதியாக செய்து முடித்திருப்பார்கள்.
இப்போது சுற்று 5 மிகச் சுலபமாக இருக்கும். இதில் நாம் எண்களை ஒரே சீரான அளவில் / வடிவத்தில் வரிசைப்படுத்தி அமைத்திருக்கிறோம். இது தேடல் சுமையை குறைப்பதுடன் எங்களை இணைக்கும்போது ஒவ்வொரு எண்ணையும் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தை நீக்குகிறது.
சுற்று 6: 5S – தக்கவை
பங்கேற்பாளர்கள் முந்தைய சுற்றில் 30 வினாடிகளுக்குள் அறுபது எண்களையும் இணைத்து வெற்றி அடைந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதனைகளைக் கொண்ண்டாடட்டும்.
பிறகு அவர்களிடம் கேளுங்கள் “இது போதுமா?”
சுற்று 6 ஐத் தொடரவும்.
இந்த சுற்று முடிந்ததும், எல்லா சுற்றுகளின் முடிவுகளையும் அனுபவத்தையும் ஒப்பிடவும்.
குறிப்பு
இந்த விளையாட்டின் மூலம் 5S இன் 5 படிகளையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
சில நேரங்களில், முதல் 3 படிகளின் பயன்பாடாகவும் இதனைக் கருதலாம்.
5 எஸ் விளையாட்டுத் தாள்கள் – Download
இது போன்ற 5 எஸ் விளையாட்டுகள் இணையத்தில் பரவலாகக் கிடைக்கின்றன. நான் சில மாதல்களுடன் இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளேன், இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் இந்த தாள்களைப் பதிவிறக்கம் செய்து உங்கள் குழு உறுப்பினர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்க பயன்படுத்தலாம்.
ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட உலகத்தை உருவாக்குவோம்!