உங்கள் ஆனந்தக் கட்டம் எது?

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5 முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி - உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா? முரண்பாடான ஆர்வங்கள் பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார்.  இசைப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் மிகப்பெரிய இசைமேதையாய் வளர்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாத ஒருவர் தனது வீட்டைக் கட்டும்போது மிகப் பக்குவமாகத் திட்டமிட்டு வேலைகளை முடிக்கிறார். உற்பத்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்கிறார். சில நேரங்களில் ஆர்டரும் எடுத்துவருகிறார். இப்படி உங்கள் அனுபவத்தில் இன்னும் பல...

Read More →

SME வளர்ச்சி Vs கார்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 4 இப்போது உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. பலபேர் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாகவே புலம்புவது கேட்கிறது. உங்களுக்குள் எழும் சந்தேகங்கள் நீங்க சொல்றபடி பார்த்தா, நான் கல்லாவுலேயே உட்காரக் கூடாதோ? என்ன சார், நடக்கற விஷயமா பேசுங்க.  இந்தக் காலத்துல யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறது? ஒருத்தனும் சரியில்லை சார். நாங்க எல்லாம் சின்ன கம்பெனி சார். நீங்க சொல்ற மாதிரி நிறைய மேனேஜர்களெல்லாம் போட முடியாது. இதெல்லாம் கார்பரேட் கம்பனிக்கு வேணும்னா ஒத்துவரும். நான் கஸ்டமரைப் போய்ப் பார்த்தாதான் ஆர்டர் கிடைக்கும். வேற யாரையும் அனுப்ப முடியாது சார். நானே போய்  சரக்கு வாங்கினா தான்...

Read More →

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் - ஏன் - ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல பணியாளராக இருக்கும் ஒருவர் தனது ஊரில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர் முன்னின்று கோவில் கட்டிக்கொண்டிருப்பர்; ஊர்த்திருவிழாவை நடத்திக் கொடுப்பார். அங்கே அவர் தலைவர் கேரக்டர். ஆனால், பாக்டரியில் கொடுத்த வேலையை மட்டும் முடித்துவிட்டுப் போய்க்கொண்டிருப்பார். இங்கே தொழிலாளர் கேரக்டர். இப்படி, ஒரு தொழில்முனைவோராகிய நீங்கள் எல்லா கேரக்டர்களையும் உங்கள்...

Read More →

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

CSense - 3 Layers of Organisation

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! - Chapter 2 முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து ‘எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டும்’ என்று வேண்டுவோம். அதன் மூலம், அந்த செயலின் முடிவை நாம் நினைத்துப் பார்த்தபின் அந்தசெயலைத் தொடங்குவோம். இதைத்தான் ஸ்டீவன் கோவே, தனது 7 Habits of Highly Successful People என்ற புத்தகத்தில் “Start with...

Read More →

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை.  ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர் தனக்கு ‘ஊக்கம் தரும் வேலைகள்’ பற்றி அறியாமல் இருப்பது; (Joyous Quadrant என்ற இந்தக் கருத்தைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்). தன் நிறுவனத்திற்கு வடிவம்  கொடுக்காமல் இருப்பது; அதனால் கனவுகளை செயல்களாக மாற்றாமல் போவது;   பருவ நிலைபோல தொழில் வளர்ச்சியில் இயல்பாய் ஏற்படும் மாற்றங்களை அறியாமல் இருப்பது; மற்றும்  வளர்ந்த நிறுவனங்களிடமிருந்து சரியான விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போவது....

Read More →

SPC – Statistical Process Control – புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாடு

நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு முறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் செய்பவர்கள் என்ற பாகுபாடும் பிரபலமாகி உலகெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் SPC என்றழைக்கப்படும் புள்ளியியல் சார்ந்த தரக்கட்டுப்பாட்டு முறையின் தோற்றத்தையும், SPC யின் அடிப்படையையும் பற்றி விவாதிப்போம். உற்பத்தித் திறன் பெருக்கம் ஃபோர்டின் வேலைப் பிரிவுக் கோட்பாடுகளின் அடுத்த கட்டமாக, பணித் துறைகள் (departments / divisions) நடைமுறைக்கு வந்தன. நாட்கள்செல்லச் செல்ல, ஒவ்வொரு துறையும் அதற்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தன. திறமையான பணியாளர்கள் ஃபோர்மேன் / சூப்பர்வைசர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் தயாரிப்புகளை ஆய்வு செய்யும் பணி திறமையான மற்றும்...

Read More →

ஃபோர்டு உற்பத்தி முறை

முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற  விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு.  ஃபோர்டு மோட்டார் நிறுவனம் போர்டு மோட்டார் நிறுவனம் (புகைப்பட உதவி - விக்கிபீடியா) தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சொந்தமான ஒரு கம்பெனியில் பொறியாளராக வேலை செய்துகொண்டிருந்த போதிலும் பெட்ரோலில் ஓடக்கூடிய வாகனங்களைத் தானே உருவாக்க வேண்டும்...

Read More →

தற்போதைய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?

பொருளாதார மந்த நிலை - உண்மையா மாயையா? ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் தூண்டுதல்கள் எவ்வாறு, எவ்வளவு விரைவில் இந்நிலையை மாற்றப் போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு SME உரிமையாளராக, மந்தநிலையை...

Read More →

நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு (Time & Motion Study)

அறிவியல் சார்ந்த மேலாண்மை முறை 1908 ஆம் ஆண்டு தியோடர் ரூஸ்வெல்டின் உரையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உற்பத்தித் திறனுக்கான தேடல் அதிகரிக்கத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் பிரெட்ரிக் வின்ஸ்லோ டய்லர் (Frederick Winslow Taylor) என்ற பொறியாளரின் Principles of Scientific Management என்ற நூல் அமெரிக்க உற்பத்தி முறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. இதன்  விளைவாக, உற்பத்தித் திறன் பற்றிய விழிப்புணர்வு பரவியது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் - அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய நேரக்கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்து அதன் மூலம் தினசரி உற்பத்தியைப் பலமடங்கு அதிகரித்தன. தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிற்கான இலக்குகளை முன்கூட்டியே அந்நிறுவனங்கள் நிர்ணயித்தன. மேலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும்...

Read More →

ஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts

CSense - Interchangeable Parts

1700களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியினால் உற்பத்திமுறைகள் மாறி உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இறுதிப் பொருளின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே சிரத்தை எடுக்கப்பட்டு வந்தது. கிரிபேவெல் உற்பத்தி முறை - நெப்போலியனின் ரகசிய ஆயுதம் பிரான்சில் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் ராணுவப் பொறியாளரான (பதவிக்காலம்1732 – 1789) ஜீன் பாப்டிஸ்டே வகெட்டே டி கிரிபேவெல் (Jean Baptiste Vaquette de Gribeauval) – சுருக்கமாக கிரிபேவெல் – அவரது புதிய உற்பத்தி முறையின் மூலம் அந்நாட்டில் ஆயுத உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுவரை ஆயுதத் தயாரிப்பும் கைவினைத் தொழிலாகவே செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு பீரங்கியும் அளவிலும் வடிவமைப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; கைத் துப்பாக்கிகளும் ஒன்றோடு ஒன்று ஒத்திராது. ஓர் ஆயுதத்தில்...

Read More →

Powered by