கொரோனாவை வெல்வோம்
ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள். 1. மனஉறுதியே மருந்து வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை. உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தைரியத்தைக்கொடுங்கள். உலகம் இப்போது அழியப்போவதில்லை. சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. 2. நாளையைப் பற்றிக் குழப்பம் வேண்டாம் நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று அறுதி இட்டுக் கூற முடியாத...